வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (09/10/2017)

கடைசி தொடர்பு:19:25 (09/10/2017)

கோவையில் வரிவிதிப்புக்கு எதிராகப் போராட்டம் - அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கோவை மாநகராட்சியில் குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி உயர்த்தப்பட்டது. அதேபோல, குப்பை வரி என்று புதிதாக ஒரு வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கோவையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயன், 'வரிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்று மாலை மற்றும் வருகின்ற நவம்பர் 3-ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், இது தொடர்பாக மாநிலத் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரிகளைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.