Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டாட்சியர் தனது சொந்தச் செலவில் டீ கடை அமைத்துக்கொடுக்க வேண்டும்..! உயர் நீதிமன்றம் உத்தரவு..!

 

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் தேயிலை விற்பனை நிலையம் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் செயலபட்டு வருகிறது . அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு தனியார் ஒப்பந்தக்காரர்கள் இந்த டீ கடைகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் கடந்த 37 வருடங்களாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் டீ கடை இயங்கிவருகிறது. அதன் அருகே பாஸ்கரன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார்

கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 6 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அகற்றக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடித்தனர். அதன் அருகே இருந்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் தேயிலை விற்பனை நிலையத்தையும் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மதுரை வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் இடித்துவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தின் தேயிலை விற்பனை நிலைய முகவர் ராமசுப்ரமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையின் பேரில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாள்களுக்குள் அகற்றப்பட்ட தேயிலை விற்பனை நிலையத்தை அதே இடத்தில் வட்டாட்சியர் தன் செலவில் அமைத்துத் தருவதோடு, அது குறித்த தகவலை வரும் 23-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement