’எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் தமிழ்நாடு தாங்காது’: கொதிக்கும் கதிராமங்கலம் மக்கள்!

'எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால், தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டத்தை நடத்துவோம்’ என்று கொதிக்கின்றனர் கதிராமங்கலம் கிராம மக்கள்.

 கதிராமங்கலம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தவர்கள் இன்று 144-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாதுரையிடம் பேசினோம், ’நாங்கள் இங்கு காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், மாவட்ட ஆட்சியரோ நாங்கள் ஏதோ பொழுதுபோக்குக்காகப் போராட்டம் நடத்தி வருவதாகச் சொல்லுகிறார். இதுநாள் வரை யார் யாரோ எங்களுக்கு ஆதரவாகக் களமிறங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால், 144-வது எட்டியும் இன்று வரையில் எங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கதிராமங்களத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், காந்திஜெயந்தி அன்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், இதுவரை எதையுமே மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

மக்கள் உணர்வுகளை, பாதிப்புகளைப் புரிந்துகொள்ளாமல் எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பேசிவருகிறார்கள். போராட்டத்தை கொச்சைப்படுத்தினால், எங்கள் போராட்டத்தை புதிய வடிவில் மாற்றி தமிழ்நாடே தாங்க முடியாத அளவுக்கு மிகப்பெரியளவில் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!