திருமலை பெருமாள் திருவடி வணங்க இலங்கை அதிபருக்கு மட்டும் அனுமதி ஏன்?

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளைத் தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால், இலங்கை அதிபர் மைத்திரிபாலசிறிசேன மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருமலையில் உள்ள சிலா தோரணத்திற்கு அருகே பெருமாளின் திருவடிகள் மட்டும் தனியே உள்ளது. திருமலையின் உயரமான மலைப்பகுதியான நாராயணகிரியில் அமைந்துள்ளது ஸ்ரீவாரி பாதாலு. பெருமாள் ஏழுமலையில் முதன் முதலாக பாதம் பதித்த இடம் இது. புராணங்களிலும் இதற்கான அத்தாட்சி உள்ளது. இந்தத் திருவடிகளைப் பக்தர்கள் வந்து நித்தம் தொழுது செல்வது வழக்கம். சமீபத்தில் இந்தப் பாதங்களைச் சீர் செய்து கண்ணாடி பேழைக்குள் பாதுகாத்து வருகின்றது திருமலை திருப்பதி தேவஸ்தானம். மீண்டும் ஸ்ரீவாரி பாதங்களுக்கு எவ்வித பங்கமும் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு என்று கூறி வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம். சாதரண பக்தர்களால் அரை கணம் கூட காண இயலாதநிலையில் ஏழுமலையானின் பாத தரிசனம் என்பது மூல சன்னதியில் சாத்தியமில்லாத ஒன்றுதான்.  ஸ்ரீவாரிபாதாலுவிற்கு சென்று திருப்பாதங்களைத் தொட்டு தொழுது வந்தனர். இதற்கும் நிபந்தனை ஏற்பட்டது. கண்ணாடிப் பேழையில் திருப்பாதங்களைப் பார்க்க மட்டுமே அனுமதி என்பது பக்தர்களை வருத்தமடைய செய்திருக்கிறது.  

இந்நிலையில் தேவஸ்தானம் பெருமாளின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்க இலங்கை அதிபர் மைத்திரிபாலசிறிசேன மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ’ஏழுமலையானின் சன்னதியில் ஏழை எளிய பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலை தேவஸ்தானம் செய்துள்ளது வருந்தத் தக்கதாக இருக்கிறது’ என்கிறார்கள் பக்தர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!