Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரிமை முழக்க மாநாடு... 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'-வின் புதிய பரிணாமம்!

மாநாடு

'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. 'லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்' போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் 'உரிமை முழக்க மாநாடு' நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பினர்.

கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட 'உரிமை முழக்க மாநாடு' நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள். சென்னையில் நடைபெற்ற மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, "சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், 'பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா' இறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

மாநாடு

உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை 
1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும். 
2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும். 
3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும். 
4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும். 
5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். 
6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 
7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 
8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும். 
9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 
10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும். 
11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும். 
12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். 
13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 
14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். 
15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். 
ஆகியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement