வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (10/10/2017)

கடைசி தொடர்பு:09:44 (10/10/2017)

டெங்கு பாதிப்பு - தமிழக அரசை சாடும் வைகோ!

‘டெங்கு ஆபத்தை உணர்ந்து, தமிழக அரசு முன்கூட்டியே விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்’ என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 

வைகோ
 

ம.தி.மு.க-வுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் விதமாக, சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வைகோ சூளுரை ஏற்றார். பின்னர், டெங்கு பாதிப்புகள்குறித்துப் பேசிய அவர்,  ’டெங்கு ஆபத்தை உணர்ந்து அரசு முன்கூட்டியே விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். டெங்குக் காய்ச்சல் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பு இல்லை. போதிய மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். டெங்கு காய்ச்சலுக்குத் தனியார் மருத்துவமனைகளும் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று பேசினார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க