வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (10/10/2017)

கடைசி தொடர்பு:13:21 (10/10/2017)

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி டாக்டர் கைது!

பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலி டாக்டர் ஒருவர் புதுச்சேரி போலீஸால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

புதுச்சேரி

புதுச்சேரி-கடலூர் சாலையில் கிருமாம்பாக்கத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த +1 படிக்கும் மாணவி அனிதா (பெயர் மாற்றம்). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நட்பாகப் பேசிவந்துள்ளார். கம்பவுண்டரான இவர், டாக்டர் என்று கூறி அந்தப் பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்துவந்திருக்கிறார். மாணவியுடன் பழகிய சில நாள்களிலேயே அவருக்கு மொபைல் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன். போலி டாக்டரின் உள்நோக்கத்தைப் புரியாத அந்த மாணவி, அவருடன் பழகியதுடன் போனிலும் அதிக நேரம் பேசிவந்திருக்கிறார். போனில் ஆபாச வார்த்தைகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறிய போலி டாக்டர், ஒரு கட்டத்தில் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் போலி டாக்டர் மணிகண்டன்மீது நடவடிக்கை எடுக்க, கிருமாம்பாக்கம் காவல்நிலையத்துக்குப் பரிந்துரைசெய்தது குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு. அதன் அடிப்படையில், மணிகண்டன் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்தவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த போலி டாக்டர் கடலுார் அருகே பதுங்கியிருந்தபோது,  கிருமாம்பாக்கம் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க