போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி!

தமிழ்நாடு அரசு, தமிழக மாணவர்களைப் போட்டித் தேர்வுக்கு தயார்செய்யும் வகையில் இலவசப் பயிற்சி வகுப்புகளை நவம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளது. இந்த இலவச வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க, தமிழக அரசின் 'போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இலவசப் பயிற்சி

கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2 பணிக்கும், வங்கிப் பணிகள், ரயில்வே, மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளது. 

முதல்கட்டமாக, 500 பேரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். இதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். விண்ணப்பிப்பவர்களுக்குத் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வகுப்பின்போது, தேர்வுகளும் இலவசப் பயிற்சிக்குரிய நூல்களும் வழங்கப்படும். கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்மூலம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலம் மூன்று மாதம். சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராஜா கல்லூரி வளாகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. பயிற்சி, நவம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளது. விண்ணப்பங்கள் 16.10.2017 அன்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2017. கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com.  என்ற இணையதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!