Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் பரவும் டெங்கு - வீட்டின் முன் குப்பைகளைத் தேக்கியவருக்கு அபராதம் விதித்த கிரண்பேடி

புதுச்சேரியில்,டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், வீட்டின் முன் குப்பைகளைத் தேக்கிவைத்திருந்தவருக்கு அபராதம் விதிக்கச் சொல்லி உத்தரவிட்டார், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரி

தமிழகத்தையடுத்து புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புஉணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வேலையில் மாநில அரசும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஈடுபட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு, டெங்கு விழிப்புஉணர்வுக்கான 5 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்ட கிரண்பேடி, நேற்று டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆளுநர் மாளிகையில் ரத்த தான முகாமை நடத்தினார். அதில், கிரண்பேடி உட்பட ஆளுநர் மாளிகை ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.

கிரண்பேடி

அதேபோல, வீட்டின் முன் அல்லது காலி மனைகளில் குப்பைகளைத் தேக்கினாலோ, மழை நீர் தேங்கும் நிலையில் இருந்தாலோ சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நகராட்சி சார்பில் ரூ.100 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, முதலியார்பேட்டை பகுதியில் துறை அதிகாரிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார் கிரண்பேடி. அப்போது, பழனி என்பவரது வீட்டின் முன்பு சுகாதாரமற்ற முறையில் குப்பை கொட்டப்பட்டிருந்தது. உடனே அந்த வீட்டின் உரிமையாளரை அழைத்த கிரண்பேடி, அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கச் சொல்லி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அங்கிருந்த குப்பைகளை உடனே அகற்றும்படியும் வீட்டு உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement