Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’டெங்கு உயிரிழப்புகள்குறித்து தமிழக அரசுக்கு கவலையேயில்லை’: ஸ்டாலின் குற்றச்சாட்டு

'டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள்குறித்து தமிழக அரசு கவலைப்படுவதேயில்லை’ என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் காரணமாக , தமிழகம் முழுவதும் பல உயிரிழப்புகள்  ஏற்பட்டுவருகின்றன. தமிழக சுகாதாரத்துறை சார்பாக டெங்குவை ஒழிக்க பல சுகாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் டெங்குவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

“டெங்கு காய்ச்சல்குறித்து அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள்குறித்து தமிழக அரசு கவலைகொள்வதேயில்லை. அ.தி.மு.க ஆட்சியில் ஒரு நாளும் அரசியல் நாகரிகம் என்பதைக்  காணவே முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான குற்றச்சாட்டுகுறித்து தேசிய எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை கேள்வி எழுப்பிவரும் வேளையில், ஸ்டாலின், “அமித்ஷா-வின் மகன் ஜெய் ஷா மீதான புகார்கள்குறித்து சோதனை நடத்தப்படுமா” என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement