Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் பா.ஜ.க- கம்யூனிஸ்ட் தொண்டர்களால் பரபரப்பு!

கேரள மாநிலத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து பேரணி நடத்திய புதுச்சேரி மாநில பா.ஜ.க-வினர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்தனர். அதைக்கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இரு தரப்பினரையும் கைதுசெய்தது காவல்துறை.

புதுச்சேரி

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும், மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இருதரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க மீது தொடர் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சுமத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக புதுச்சேரி மாநில பா.ஜ.க சார்பில் சுதேசி ஆலையிலிருந்து பேரணி நடைபெற்றது. மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திரா காந்தி சிலை வழியாக சென்ற அந்தப் பேரணி ரெட்டியார்பாளையத்தில் உள்ள நகரமைப்புத் திட்ட அலுவலகத்தை அடைந்தது.

புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த அந்தப் பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பேரணியில் சென்றவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக புதுச்சேரி-விழுப்புரம் தேசிய சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் திடீரென கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர், அதேபகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைதுசெய்தது காவல்துறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement