ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க 5 ஆயிரம் பேர் களப்பணி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பணியாளர்கள் களப்பணி ஆற்றி வருவதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பணியில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள், தூய்மைக் காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கொசு ஒழிப்பு, புகை மருந்து தெழிப்பு நீர் தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்தல், துப்புரவுப் பணிகள், மருத்துவ முகாம்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் என ஆறு வகையான பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணி

மாவட்டத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள் நோயாளிகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தினசரி செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டம் முழுமைக்கும் 33 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 18 பேர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 பேர் இதர நோய்க் கிருமி தாக்குதலுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு இயங்கி வருவதுடன் நிலவேம்புக் குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதிகமான காய்ச்சல் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. இதுவரை அதிகாரபூர்வமாக ஒருவர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார்'' எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!