Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ரூ.203 கோடி இழப்பீடு'- எண்ணூரில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல் புறப்பட அனுமதி!

எண்ணூர் துறைமுகம் பகுதியில் விபத்துக்குள்ளான மேபிள் கப்பல் ஈரான் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 


ஈரான் நாட்டைச் சேர்ந்த மேபிள் கப்பல், சென்னை துறைமுகம் பகுதியில் டான் காஞ்சிபுரம் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஜனவரியில் நடந்த இந்த விபத்தால் கடல்பரப்பில் கச்சா எண்ணெய் கொட்டி, கடல் நீர் மற்றும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த விபத்தை ஏற்படுத்திய மேபிள் கப்பல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருப்பினும், ஈரான் நாட்டுக்கு மேபிள் கப்பல் திரும்பச் செல்ல கப்பல் போக்குவரத்துக் கழக இயக்குநர் அனுமதி அளித்தார். 

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.  அப்போது, கச்சா எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 203 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளித்துள்ளதால் ஈரான் கப்பல், சொந்த நாட்டுக்குச் செல்லத் தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement