Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழிப்பறியில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த சிறுவர்கள்: அதிர்ச்சியில் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பது சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. இதுகுறித்து காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும், கொள்ளையர்களைப் பிடிப்பதில் காவல்துறை பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இதனால் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்தன. பதினைந்தாயிரம் ரூபாய், ஆயிரம் ரூபாய், இரண்டு செல்போன், அரை சவரன் நகை போன்றவை சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் சிறுவர்கள் வழிப்பறி

இந்த நிலையில், காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்பகுதி வழியாக வந்த சிறுவனை காவல்துறையினர் விசாரிக்கும்போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தான். அதைத்தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அவன் கொள்ளையடிப்பது தெரியவந்தது. மேலும், அவனுடன் கொள்ளையில் ஈடுபட்ட செட்டிகுளம் கிளார் தெருவைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். பிடிபட்ட 6 பேரில் 4 பேர் 17 வயதுக்கும் குறைவானவர்கள். இரண்டு பேர் 19 வயதுடையவர்கள். கொள்ளையில் ஈடுபட்ட பைக், செல்போன் முதலியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஒரே தெருவைச் சேர்ந்த சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement