சென்னை - காஸிப்பேட்டை இடையே மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில் ! | India-Germany sign Joint Declaration of intent to increase train speed 200 kmph between Chennai-Kazipet

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/10/2017)

கடைசி தொடர்பு:21:40 (10/10/2017)

சென்னை - காஸிப்பேட்டை இடையே மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிகள் ரயில் !

சென்னை - காஸிப்பேட்டை ரயில் தடத்தில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ரயில்வேத் துறை திட்டமிட்டமிட்டுள்ளது. 

தெலுங்கானா மாநிலம், காஸிப்பேட்டை முதல் சென்னை வரையிலான 643 கி.மீ. நீளம் கொண்ட இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான செயல்திட்ட ஆய்வுக்காக இந்திய ரயில்வே மற்றும் ஜெர்மனி ரயில்வே இடையில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வினி லோஹனி முன்னிலையில் டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்துக்கான செலவில் இருநாடுகளும் தலா 50 சதவிகிதம் வீதம் பங்களிப்பது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து குண்டூர், நெல்லூர், தெனாலி, வாராங்கால் வழியாக காஸிப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் 135 கி.மீ. தூரம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிலும், 508 கி.மீ தெற்கு மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. காஸிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் வாராங்கல் ரயில்நிலையத்தைக் கடந்தே செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் பாதை, பாலங்கள் மற்றும் மற்ற வசதிகளை ரயிலின் வேகத்துக்கேற்ப மேம்படுத்த இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன.


[X] Close

[X] Close