Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு விளம்பரத்தால் சிக்கிக்கொண்ட போலி மருத்துவர்கள்!

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து தருவதாக விளம்பரம் செய்த போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

போலி மருத்துவர்கள் கைது

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிவருகிறது. இந்தக் காய்ச்சலுக்காகப் பல இடங்களில் நில வேம்புக் கஷாயம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவர் ஒருவர் மருந்து தருகிறார் என்றும்,  அந்த மருந்து சாப்பிட்டால் உடனே காய்ச்சல் குறைகிறது என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார், சுகம் சித்தா கிளினிக் எனும் பெயரில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் கலையரசன். சமூக வலைதளத்தில் இத்தகவல்கள் வைரலானது. இந்நிலையில், அதே கலையரசன், திருச்சி மண்ணச்சநல்லூரில் கிளினிக் நடத்திவந்தாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் எதிரே கடந்த மூன்றாண்டுகளாக கிளினிக் நடத்திவந்த கலையரசன், போலி மருத்துவர் என்றும், அவருடன் சங்கர் மற்றும் தனசீலி ஆகியோர் இணைந்து செயல்பட்டதாகவும். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர்கள், சட்டத்துக்குப் புறம்பாக சிகிச்சையளித்ததாக, சங்கரையும் தனசீலியையும் திருச்சி போலீசார் கைதுசெய்தனர்.  மேலும், போலி மருத்துவர்களுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த கலையரசனைத் தேடிவருகின்றனர். கலையரசன், தற்போது தலைமறைவாக உள்ளார்.  எனவே, அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம், திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement