வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (11/10/2017)

கடைசி தொடர்பு:12:54 (11/10/2017)

ஆண்-பெண் கைதியின் தனிமைச் சந்திப்பு! - சஸ்பெண்டுக்கு ஆளான சிறைக் காவலர்கள்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைக்குள் ஆண்,பெண் கைதிகள் சந்தித்துப் பேசிய விவகாரத்தில், சிறைத்துறை அதிகாரிகள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறை

புதுச்சேரி மத்திய சிறையில், கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனைபெற்ற ஆண் மற்றும் பெண் கைதிகள் தனித்தனியே அடைக்கப்படுவார்கள். ஆண், பெண் கைதிகள் ஒருவரையொருவர் சந்திக்க முடியாதபடி சிறைக்குள் இரு பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும் ஆண், பெண் கைதிகள் ஒரே அறையில் தனிமையில் சந்தித்தது, அதற்கு சிறைத்துறை அதிகாரிகளே துணைபோன விவகாரம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண் மற்றும் பெண் கைதிகள் சந்திக்க உதவியதாகத் துணை சிறைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை
வார்டன் வீரவாசு, பெண் கைதிகள் பிரிவு வார்டன் கலாவதி, ஆண் கைதிகள் பிரிவின் வார்டன் பத்மநாபன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து  ஐ.ஜி பங்கஜ்குமார் ஷா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க