வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (11/10/2017)

கடைசி தொடர்பு:13:06 (11/10/2017)

கோவையில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

கோவையில், தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை பேருந்து விபத்து

பெங்களூரிலிருந்து கொச்சியை நோக்கி, சாம் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்னி ஒன்று, நேற்றிரவு புறப்பட்டது. இந்தப் பேருந்து, இன்று அதிகாலை, மதுக்கரை - செட்டிபாளையம் அருகே செல்லும்போது, எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. லாரிமீது மோதாமல் தவிர்க்க, பேருந்து ஓட்டுநர் ப்ரேக் அடித்துள்ளார். ஆனால், மழை பெய்து சாலை ஈரமாக இருந்ததால், பேருந்து நிலை தடுமாறி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் யூனோபாலிடம் செட்டிபாளையம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்த விபத்தால், அந்தப் பகுதியில் சற்று நேரத்துக்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.