வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (11/10/2017)

கடைசி தொடர்பு:14:45 (11/10/2017)

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, டெங்கு பாதிப்புகள் மற்றும் வாக்கி-டாக்கி ஊழல் விவகாரம் உள்ளிட்டவைகுறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை 20 சதவிகிதம் வரை உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ஊதிய உயர்வுகுறித்து அமைச்சரவைக்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கும்பொருட்டு மதுபானங்களின் விலையை அதிகரிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, பீர் ஒன்றுக்கு ரூ.10-ம், 180 மி.லி அளவுகொண்ட மதுபான பாட்டில்களுக்கு ரூ.12-ம் உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.