Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு காய்ச்சலால் செவிலியர் மகன் உயிரிழப்பு: அச்சத்தில் கோவை மக்கள்

டெங்கு காய்ச்சல் காரணமாக கோவையில் செவிலியர் ஒருவரின் 12 வயது மகன் உயிரிழந்துள்ளார்.


டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கோவை மாவட்டத்திலும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு தாராபுரத்தைச் சேர்ந்த அருந்ததி என்ற சிறுமி டெங்குக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தற்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெர்வின் டெக்சன் என்ற 12 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் தேன்மொழி என்பவரின் மகன் ஜெர்வின்.  ஜெர்வினுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஜெர்வினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, இன்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். டெங்குக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement