Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடுங்கவைக்கும் நடுநிசி நாய்கள்… சோகத்தில் செங்கல்பட்டு மருத்துவமனை!

செங்கல்பட்டு மருத்துவமனையில் நாய்கள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உதவிக்காக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். மருத்துவர்கள் வரும் நேரத்தில் அவர்கள்கூட வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள். இதனால் உதவிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மருத்துவமனை வளாகத்திலேயே சுற்றித் திரிவது வழக்கம். இரவு நேரங்களில் நாய்கள் குறைப்பதால், அவர்களால் சரியாக உறங்க முடிவதில்லை.

இரவு நேரங்களில் மருத்துவமனையில் உதவியாளர்கள் தங்குவதற்குப் போதுமான வசதி செய்து கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே எழுந்திருக்கிறது. இரவு நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றபோது, நுழைவுவாயில் அருகே பொதுமக்கள் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். நாய்களும் அவர்களுடன் உறங்கிக்கொண்டிருந்தன. யாராவது இருசக்கர வாகனத்தில் வந்தாலோ துணியைப் போர்த்திக்கொண்டு வந்தாலோ நாய்கள் சத்தமாகக் குறைக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதனால் அவர்கள் நிம்மதியாக உறங்கக்கூட முடிவதில்லை.

செங்கல்பட்டு மருத்துவமனை

அங்கு நின்றிருந்த சரவணன் என்பவரிடம் பேசினோம். “என் மனைவி பிரசவத்துக்காக காஞ்சிபுரத்திலிருந்து வருகிறோம். அவருடன் உறவினர் ஒருவர் தங்கி இருக்கிறார். லேடிஸ் வார்டு என்பதால் நான் அங்கு தங்க முடியாது. இதனால் வெளியில்தான் தங்கி இருக்கிறோம். இரவு நேரங்களில் நாய்கள் அதிகமாக வந்துவிடுகின்றன. நாய்கள் குரைக்கும் சத்தத்தால் நிம்மதி இல்லை. மழை பெய்தால் ஒதுங்கக்கூட இடமில்லை. உதவியாளர்கள் தங்குவதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வசதி செய்துகொடுக்க வேண்டும்'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement