Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரு பைசாகூட கடன் வழங்கவில்லை' - செல்லூர் ராஜூக்கு எதிராகக் கொந்தளிக்கும் பி.ஆர்.பாண்டியன்

நடப்பாண்டு பயிர்க்கடனாகத் தமிழகத்தில் ஒரு கூட்டுறவு வங்கியிலும் ஒரு பைசாகூட கடன் வழங்கவில்லை என்பதுதான் உண்மை என்று தமிழக காவிரி விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாணிக்கோட்டகம் விவசாய விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழக காவிரி விவசாயச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, ''காவிரியில் குறைந்தது 25,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டால்தான் கடைமடை பகுதிவரை தண்ணீர் வந்துசேரும். அப்போதுதான் விதைத்த, முளைத்த பயிர்களைப் பாதுகாக்க முடியும். இதற்கும் பொதுப் பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.  

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 2016-17-ம் ஆண்டு பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.2,200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல். வடிகட்டிய பொய். நடப்பாண்டு பயிர்க்கடனாகத் தமிழகத்தில் ஒரு கூட்டுறவு வங்கியிலும் ஒரு பைசாகூட கடன் வழங்கவில்லை என்பதுதான் உண்மை. தற்போது கூட்டுறவுத் துறையினர் கடந்தாண்டு பெற்ற கடனுக்கு 13 சதவிகித வட்டி விதித்ததோடு, அதில் மூன்றில் ஒருபங்கு தொகையை உடனே கட்ட வேண்டும் என்று விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்கள். இது விவசாயிகளுக்கு வேதனை தரும் செயலாகும். கடந்தாண்டு காவிரி நீரின்றி, போதிய மழைநீரும் இன்றி பயிர்கள் கருகி, விவசாயிகள் மடிந்தது அரசுக்குத் தெரியாதா? 

கடந்தாண்டு கடனை எல்லாம் நிபந்தனை இல்லாமல் ரத்துசெய்து கடன் வழங்க வேண்டும் என்று பலமுறை அரசை வலியுறுத்தி வருகிறோம். பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் குளறுபடியால் விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு இழப்பீடு கிடைக்காமல் பாதித்துள்ளனர். அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவிகித இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்பும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் விஷயத்தில் மெத்தனம்காட்டி வருவது கண்டிக்கத்தக்கது'' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement