Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கயிற்றுப்பாலத்தில் சாகசம் செய்து மக்களை உற்சாகப்படுத்திய மதுரை கலெக்டர்!

சர்வதேச பேரிடர் தினம் வருவதை முன்னிட்டு மதுரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தினார். இன்று காலை மதுரை அரசு நீச்சல் குளத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எப்படி சமயோசிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி ஒத்திகை நிகழ்ச்சியை பேரிடர் மீட்புப் படையினர் செய்துகாட்டினார்கள். அப்போது, கயிற்றால் உருவாக்கப்படும் தற்காலிக பலத்தில் எப்படி கடப்பது என்பதை செய்து கட்டினார்கள்.

வீரராகவராவ்

கொஞ்சம் ரிஸ்கான அந்த ஒத்திகையைப் பார்த்துக்கொண்டிருந்த கலெக்டர் வீராராகவராவ், நான் செய்து பார்க்கிறேன்' என்று தன்னுடைய காலணிகளை கழட்டிவிட்டு விறுவிறுவென்று கயிற்றுப்பாலத்தில் வேகமாக நடந்து காட்டினார். இதைக் கூடியிருந்த மக்கள் பார்த்து ஆரவாரம் செய்தனர். அரசு அதிகாரிகள் எந்த நிகழ்ச்சியிலும் விருந்தினராகவும், பார்வையாளராகவும் மட்டும் இருக்கக் கூடாது. நாமே களத்தில் இறங்கி செய்து காட்டவேண்டும் என்பதில் கலெக்டர் எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ஏற்கெனவே பத்து கிலோ மீட்டர் மாரத்தானில் ஓடினார், அரசு ஊழியர் விளையாட்டுப்போட்டியில் ரன்னிங்கில் இரண்டாமிடம் வந்தார். வைகையில் இறங்கி சுத்தம் செய்தார். அதுபோல இன்று பேரிடர் மீட்பு நிகழ்ச்சியில் டெமோ செய்து காட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement