'மேல் அதிகாரிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்'- கலெக்டரிடம் துப்புரவு பணியாளர்கள் புகார்  | sweeper submits their petition to collector

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/10/2017)

கடைசி தொடர்பு:19:20 (11/10/2017)

'மேல் அதிகாரிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்'- கலெக்டரிடம் துப்புரவு பணியாளர்கள் புகார் 

           

"மேல் அதிகாரிகள் எங்களை ரொம்பவே கொடுமைப்படுத்துகிறார்கள்" என்று சிவகங்கை கலெக்டரிடம் துப்புரவு பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்களாக 35 பேர் பணிபுரிகிறோம். இதில் 6 பேர் மேல்சாதியினர். இவர்கள் எங்களுக்கான பணியில் துப்புரவுத் தொழிலாளர்களாக வேலைக்கு சேர்ந்துவிட்டு ஆபீஸில் வேலைசெய்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு மேல் அதிகாரிகள் எங்களை ரொம்பவே கொடுமைப்படுத்துகிறார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு கவசமான கை உறை, கால் பூட், சோப்பு, யூனிபார்ம் போன்றவைகள் எல்லாம் வழங்குவதே இல்லை. பெண் துப்புரவுப் பணியாளர்களை ஆறுமணிக்கு மேல் மஸ்டர் ரோல் எடுப்பது இல்லாமல் வேலையும் செய்யச் சொல்கிறார்கள். எங்களுக்கான துப்புரவுப் பணி ஆய்வாளர் தங்கதுரை எங்களை  ரொம்பவே அநாகரிகமாக பேசுகிறார். எங்கள் சமூக மக்கள் 300 குடும்பங்கள் இருக்கிறோம். எங்களுக்கு சுடுகாடு ஒதுக்கீடு செய்தார்கள். அந்த இடத்தில் எந்த வேலையும் செய்யவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்க ஆளு ஒருத்தர் இறந்துபோயிட்டாரு. அவர எரிக்க இடமில்லாமல் குப்பைகள் கொட்டுற இடத்துல குப்பையோட குப்பையா போட்டு எரிச்சோம். இதுவரைக்கு நாங்கள் கலெக்டர் ஆபீஸ் பக்கமே வந்தது கிடையாது. நாங்க எங்கள் குறைகளை கேட்டா  டிரான்ஸ்பர் போட்டுவேன்னு மிரட்டுறாரு எங்களுக்கான மேல் அதிகாரி தங்கதுரை. ஒரு கால் இல்லாதவர்கூட சாக்கடையில் இறங்கி சாக்கடை அடைப்பு எடுக்குறாரு. ஆனால், எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் எங்களுக்கான பணத்தை கொள்ளையடிச்சுட்டு, எங்களையே அசிங்க அசிங்கமாக பேசுகிறார், அதிகாரியான தங்கதுரை என கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்கிறார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க