Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஊசியை மாத்திப்போட்டு கொன்றுவிடுவோம்' - மிரட்டிய அரசு செவிலியர்கள்; அதிர்ந்த நோயாளிகள்

"ஒரே ஊசியை வைத்துக்கொண்டு ஐந்து பேரிடம் ரத்தம் மாதிரியை எடுக்கிறார்கள். எதிர்த்துக் கேள்வி கேட்டதால் ஊசியை மாத்திப்போட்டு கொன்றுவிடுவோம். கேட்டால் டெங்குவால் இறந்துவிட்டதாகச் சொல்லி பிரச்னையை முடித்துவிடுவோம்" என்று நோயாளிகளை நர்ஸ்கள் மிரட்டியிருக்கும் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பொதுமக்கள், அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.                  

அரியலூர் அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் 25-க்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளை 24 மணி நேரமும் மருத்துவக் குழு கண்காணிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. டெங்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் மணிமேகலை மற்றும் ஷண்முகப்பிரியா என்கிற இரு செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று இரவு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களும் செவிலியர்களும் வராததால் நோயாளிகளே செவிலியர்களிடம் சென்று, "டெங்கு வார்டு பகுதியில் எந்த செவிலியர்களும் டாக்டர்களும் வருவதுமில்லை. நீங்களாவது வந்து காய்ச்சல் அதிகமாக இருக்கிறவர்களுக்கு  மருந்து மாத்திரை கொடுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு செவிலியர்கள் ஷண்முகப்பிரியா, மணிமேகலை இருவரும், தவறான வார்த்தையால் பேசியிருக்கிறார்கள். இவர்களைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தலைமை மருத்துவர் ரமேஷ், தரக்குறைவாகப் பேசிய செவிலியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை துணை இயக்குநருக்குப் பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததையடுத்து நோயாளிகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று சிகிச்சைபெற்று வருகின்றனர்.

போராட்டம் நடத்திய சாந்தி என்பவரிடம் பேசினோம். "கடந்த ஒரு வாரமாகவே டெங்குக் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு அதிக அளவில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். டெங்கு வார்டு 24 மணிநேரமும் செயல்படும் என்று சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சொல்கிறது. ஆனால், அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்களும் இல்லை செவிலியர்களும் இல்லை. டெங்கு வார்டில் யாரும் வருவதில்லையென்று செவிலியர்கள் ஷண்முகப்பிரியா மற்றும் மணிமேகலையிடம் கேட்டதற்கு அவர்கள் எங்களைத் தரக்குறைவாகப் பேசியது மட்டுமல்லாமல், 'அதிகமாகப் பேசினால் ஊசியை மாத்திப்போட்டு கொன்றுவிடுவோம் என்றும் யாரும் கேட்டால் டெங்குவால் இறந்துவிட்டதாகச் சொல்லி விஷயத்தை மூடி மறைத்துவிடுவோம். எங்களை யாரும் ஒன்னும் பண்ணமுடியாது' என்று மிரட்டினார்கள். அது மட்டுமல்லாமல் ஒரே ஊசியை வைத்துக்கொண்டு ஐந்து பேர்களிடம் ரத்தம் மாதிரிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் செவிலியர்கள்தான் இல்லையென்றால் போதிய மருந்துகளும் இல்லை. மக்களின் உயிர்களைக் காக்க வேண்டியவர்களே இப்படி பேசலாமா. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மக்களைத் திரட்டி போராடுவோம்" என்று கொந்தளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement