Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: தினகரன் தரப்புக்கு கூடுதல் அவகாசம்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 16-க்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய விசாரணையில், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி ஒருவார காலம் அவகாசம் தினகரன் தரப்பில் கோரப்பட்டது. மேலும், எதிரணியினர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்கள் யாவும் கட்டாயத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் வாதிடப்பட்டது. விசாரணையைக் காலம் தாழ்த்தும் நோக்கிலேயே தினகரன் தரப்பில் அவகாசம் கேட்பதாகவும், அவகாசம் அளிக்கக் கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சின்னத்துக்கு உரிமைகோரும் சசிகலா குற்றவாளியாகவும், தினகரன் வழக்குகளை எதிர்கொண்டு வருபவராகவும் இருப்பதாக வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தினகரன் தரப்புக்கு ஒருவாரம் அவகாசம் அளித்து, இறுதிவிசாரணை அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இந்தநிலையில், சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா, தினகரன் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நவம்பர் 10-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement