வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (11/10/2017)

கடைசி தொடர்பு:18:00 (11/10/2017)

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

நாடு முழுவதும் அக்டோபர் 13-ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான தினசரி விலை நிர்ணய முறைக்கு எதிர்ப்பு, பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களால் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

தினசரி விலை நிர்ணயம் காரணமாக பல்வேறு சிக்கல்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்தித்து வருவதாகவும், விலை ஏற்றம் கடுமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெட்ரோலிய பொருள்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும், பெட்ரோலியப் பொருள்களை நேரடியாக வீடுகளில் விநியோகிக்கும் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக விலையைக் கடைபிடிக்கும் விதமாக பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி. வரி விதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அக்டோபர் 13-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது இந்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.