நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நாளை சந்திக்கிறார்.

மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் பனிப்போர் நிலவி வருவதாகவும் இதுகுறித்து முறையிடவே இந்த சந்திப்பு எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு தனியாக பிரிந்து செயல்படத் தொடங்கினார். இதையடுத்து, சசிகலா கைது, தினகரனின் அரசியல் ரீ-என்ட்ரி, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது என்று பல களேபரங்கள் நடந்து முடிந்தன. அதே வேளையில், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், அவரது குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, பிரிந்து செயல்பட்ட ஓ.பி.எஸ் அணியும், ஈ.பி.எஸ் அணியும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன. சில நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகு ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணியுடன் இணைந்தது. ஆனால், இரு அணிகளும் இணைந்த பின்னரும் உள்ளுக்குள் மோதல் போக்கு இருந்ததாகவே கூறப்பட்டது. இதன் நீட்சியாகத்தான், பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் பிரதமரை சந்திக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!