வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (11/10/2017)

கடைசி தொடர்பு:20:20 (11/10/2017)

தீபாவளி பட்டாசு விபத்தைத் தடுக்க தீயணைப்புத் துறை விழிப்பு உணர்வு!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து விபத்துக்கள் ஏற்பட்டால் செயல்பட வேண்டிய அவசர கால வழிமுறைகள் குறித்து நெல்லையில் தீயணைப்புத் துறையினர் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

தீபாவளி பட்டாசு விழிப்புணர்வு

தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசுகளும் களை கட்டும். பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் சிறுவர்களும் இளைஞர்களும் பட்டாசு வெடிக்கும்போது விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய சமயங்களில் தீக்காயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை செய்துகாட்டினர். பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். 

நெல்லை மாவட்டம், கடையாலுருட்டி கிராமத்தில் உள்ள இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் சுரண்டை தீயணைப்புத் துறையினர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பார்வதிநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து செய்முறை விளக்கம் காட்டப்பட்டது. அத்துடன், தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்து விளக்கப்பட்டது. பட்டாசு விபத்து ஏற்பட்டால் தீ பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.