வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/10/2017)

கடைசி தொடர்பு:19:53 (11/10/2017)

தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதர் ராவுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சமீப காலங்களாக, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக, நீட் தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்ட மாணவி அனிதா உயிரிழந்தபோது, கிருஷ்ணசாமி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளை எழுப்பியது. அதேபோல, பா.ஜ.க-வின் மற்ற திட்டங்களுக்கும் அவர் ஆதரித்து கருத்து தெரிவித்து வந்தார். இதனால், அவர் விரைவில் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கிருஷ்ணசாமியை சந்தித்த முரளிதர் ராவ்

இந்நிலையில், பா.ஜ.க-வின் முரளிதர் ராவை, கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு கோவையில் நேற்று நடந்துள்ளது. கேரளாவில் பா.ஜ.க சார்பில், நடைபெற்ற ரத நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முரளிதர் ராவ் கோவை வந்திருந்தார். அப்போதுதான், அவரை கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது வானதி ஶ்ரீனிவாசன், சேகர் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின் மூலம் அவர் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் கசிந்தாலும், மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது என கிருஷ்ணசாமி மற்றும் பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது.