Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமநாதபுரத்தில் மூளைக் காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த ஏக்நாத் என்பவரது மகள் ஹர்ஷவர்த்தனா (10) இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படிப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்ற ஹர்ஷவர்த்தனா கடந்த சில நாள்களுக்கு முன் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். 

மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்த பள்ளி சிறுமி ஷர்ஷவர்த்தனா
 

இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஹர்ஷவர்த்தனா மூளைக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை பலனளிக்காமல் இன்று திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் ராமநாதபுரம் கொண்டுவரப்பட்டது.
 ராமநாதபுரத்தில் இன்று காலை பள்ளி மாணவன் அஜீத்குமார் (11) டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவியும் மூளைக் காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது என தொடரும் உயிரிழப்புச் சம்பவங்களால் பட்டிணம்காத்தான் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உயிர் பறிக்கும் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டிணம்காத்தான் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement