சிவகங்கை அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரன், பீட்டர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனையிட்டனர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ், கண்காணிப்பாளர், அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அலுவலகத்திலிருந்த தரகர் ஒருவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 40 ஆயிரம் பணத்தையும், ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர். மதியம் 2 மணியலிருந்து இரவு 8 மணிவரை சுமார் 6 மணிநேரம் சோதனை செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீபாவளி நேரத்தில்  தீவிரமான சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசுத் துறையில் அதிக பணபுழக்கம் உள்ள துறை, வட்டாரபோக்குவரத்து அலுவலகம், பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத் துறை வணிக வரித்துறை போன்றவைகள்தான். இந்தத் துறைகளில் உள்ள அதிகாரிகள் யாரும் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை கண்களில் படவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது. சமீபத்தில், பொதுபணித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய வீடியோவை கான்ட்ராக்டர்கள் வெளியிட்டார்கள். அப்போதெல்லாம், நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்பு போலீஸார், திடீரென கோதாவில் இறங்கியிருப்பது பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!