அரசு ஊழியர்களுக்கு ரூ. 7,000 போனஸ்! புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

 நாராயணசாமி


''தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும்'' எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்களும் அரசுச் செயலாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின் பேசிய முதல்வர் நாராயணசாமி, ''தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குரூப் சி மற்றும் குரூப் பி அரசு ஊழியர்களுக்கு 7,000 ரூபாய் போனஸும், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,200 ரூபாய் போனஸும், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11,000 ரூபாய் போனஸும் வழங்கப்படும்'' எனத் தெரிவித்தார். மேலும், ''ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு, மாதம் 40 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் மாதம் வரை 80 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்காக 40 சதவிகிதம் தமிழக மக்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர்'' என்றும் அவர் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!