Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அபுதாபியில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

கத்தார் நாட்டிலிருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  ஐந்து மீனவர்கள், அபுதாபியில் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத் தரக் கேட்டு ,மீனவர்களின் குடும்பத்தினர் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவானிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு ரீகன், கரோலின் ஜாகின், ஜான் பிரபாகரன், ரீகன் , ஜயோ கிளாட்வின், ஜோ ஸ்டாலின் ஆகிய மீனவர்கள் கத்தார் நாட்டின் வக்ரா பகுதியிலுள்ள ஜாபர் ஜூபைல் என்பவரது படகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 26-ம் தேதி அபுதாபி கடற்படையினரால்  ஐந்து மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். 

மீனவர்களை அபுதாபி கடற்படையிடமிருந்து மீட்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானைச் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர். மீனவர்கள்  ஐந்து பேரையும் விடுதலை செய்யவேண்டி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் மற்றும் அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் முயற்சியால், மீனவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டு, இந்தியா திரும்ப விமானப் பயணச்சீட்டு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் செய்துள்ளார்கள். இதனால், மீனவர்கள் சில நாள்களில் சொந்த ஊர் திரும்ப இருக்கிறார்கள் என அபுதாபி இந்தியத் தூதரக அதிகாரி தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement