Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவாலயம் புதுப்பிக்க அனுமதி கோரி போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சி.எஸ்.ஐ தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தைப் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கேட்டு, ஜனநாயக கிறிஸ்தவ பேரவையினர் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இங்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர்  ஜெபம் செய்துவருகின்றனர்.

தற்போது இந்த சி.எஸ்.ஐ தேவாலயம் பழுதடைந்துள்ளதால், ஆலயத்தினுள் சென்று வழிபட மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே,ஆலயத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்துத் தர, அதே இடத்தில் யக்கோரி சபை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களின் வழிபாடுகளில் அரசு முட்டுக்கட்டையிடாமல் உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி, தோவாளை சந்திப்பில்   ஜனநாயக கிறிஸ்தவ பேரவையினர் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.,கலந்துகொண்டு பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement