Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பி.ஜே.பி-யின் ஆட்சி வாக்குறுதிக்கு எதிரான ஆட்சி!'' திருநாவுக்கரசர் தாக்கு!

திருநாவுக்கரசர்

''பி.ஜே.பி., ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 

பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் மெகா ஊழலைக் கண்டித்தும், மக்கள் விரோத மோடி அரசின் ஊழல்களைக் கண்டித்தும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர், ''அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு தொழில் தொடங்கி அது, அமித் ஷா பி.ஜே.பி தலைவராகப் பதவி ஏற்ற  மூன்று ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து, 80 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. எந்தத் தொழிலும் செய்யாத நிறுவனத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது... யார் கொடுத்தது? எதற்காகக் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. 

இதுபோன்று பி.ஜே.பி அமைச்சர்கள், அந்தக் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்–அமைச்சர்கள்மீது ஊழல்கள் மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே, பி.ஜே.பி., ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைமூலம் 16 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தைக்கொண்டு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெரும் கோடீஸ்வரர்களின் கடன் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின்போது, நாடு முழுவதும் 80 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்புத் தந்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயக் கடன்களை 10 நாள்களில் தள்ளுபடிசெய்வதாக தற்போது ராகுல் காந்தி வாக்குறுதி தந்துள்ளார். 

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் பயந்துபோய் இருக்கிறார்கள். தினமும் 10 பேர் சாகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. மருத்துவக் குழுவை அனுப்பவில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலின்போது, எம்.பி-க்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வந்த மந்திரிகளில் ஒருவர்கூட தமிழகத்தைப் பார்வையிட வராதது ஏன்?

தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசுடன் கைகோத்துக்கொண்டு தமிழக மக்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான விலையைத் தரவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளது. அப்போது, மோடி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்பட்டு, ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும்'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement