Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன?

     

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 


தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருள்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிடவேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் (யூ-1-அளவீடு) அல்லது 145 டெசிபல் (ஊ-அளவீடு) க்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைபிடிக்க வேண்டியவை - 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனைசெய்யக்கூடாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனைசெய்யக்கூடாது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை -

*இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக்கூடாது.

*125 டெசிபல் அளவுக்குக் கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை,  குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால், மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் பக்கத்துவீட்டார் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
           


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement