Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

மீனவர்கள்


பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகின்றனர். சமீப காலங்களில் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று  சார்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் பாண்டி, ரெமிஜிஸ், ஜார்ஜ், ரோமியோ, முருகன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் இன்று காலை சிறை பிடித்து சென்றனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 180-க்கும் அதிகமான படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள நிலையில் அவற்றை மீட்க முடியாமல் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இதனால் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடி தொழில் அருகி வரும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் மிக குறைந்த அளவிலான படகுகளே மீன் பிடிக்க சென்று வருகின்றன. இந்நிலையில் அத்தகைய படகுகளையும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement