Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்துக்கு அனுமதி; பிரேமலதாவுக்கு மறுப்பு! கலகலத்த அரசு மருத்துவமனை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆறுதல் தெரிவித்தார். அதே நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளைப் பார்க்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்

 

டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், `தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தே.மு.தி.க கட்சியினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார். மேலும் ‘தமிழகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தே.மு.தி.க-வின் அனைத்து மாவட்டங்கள் சார்பாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, 'இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே' என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். 

vijaykanth
 

விஜயகாந்த் உத்தரவின் பேரில், திருப்பூர் மற்றும் கோவையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று அரசு மருத்துவமனைகளில் நேரில் சென்று பார்வையிட திட்டமிட்டிருந்தார். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் பிரேமலதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 'டெங்கு வார்டுக்குள் செய்தியாளர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை' என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பின்னர் பிரேமலதா அனுமதிக்கப்பட்டார். 

இதனிடையே, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற விஜயகாந்த், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை’ என்று குற்றம் சாட்டினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement