Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூத்திரச் சந்தில் இயங்கிய நூலகத்துக்கு விமோசனம்!

மேலூர் பகுதியில் பல வருடங்களாக இயங்கிவந்த நூலகத்துக்கு விமோசனம் கிடைத்துள்ளது. கக்கன் காலத்து இந்த அரசு நூலகம், எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டது . மாற்றுத்திறனாளிகள், நூலகம் வர முடியாத சூழலில் நூலகப் படிக்கட்டுகளின் கைப்பிடிகூட இல்லாமல் இயங்கிவந்தது.

கடந்த 2010ல், மேலூர் வழக்கறிஞர் பா.ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, புதிய நூலகம் கட்ட முறையான உத்தரவையும் பெற்றார். இருந்தபோதிலும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நூலகம் மூத்திரச் சந்தில் ஏழு ஆண்டுகள் இயங்கிவந்தது. பிறகு, நீதிமன்ற நெருக்கடியால் புதிய நூலகம் கட்டப்பட்டது. அதிகாரிகள், நூலகத்தை யார் திறப்பது என்று சாஸ்திரம் பார்த்துக்கொண்டு திறக்காமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த வார விகடன் இணையச் செய்தியில், இது தொடர்பாக மூத்திரச் சந்தில் இயங்கும் நூலகம் எனத் தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, நேற்று இந்த நூலகத்தை முதல்வர் காணொலிக் காட்சிமூலம் திறந்துவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நூலகத்தைத் திறந்து, தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பது மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால், தற்போது அங்கு உட்கார்ந்து படிக்க, போதுமான மேஜைகளும் சேர்களும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement