Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஜராத்தி தெரியாததால் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பெண்கள் கழிவறைக்குள் தெரியாத்தனமாக நுழைந்துள்ளார். 

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

'ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் டவுசர் அணிந்த பெண்களைப் பார்க்க முடியவில்லை' என்று சமீபத்தில் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். 'டவுசர் அணிந்த பெண்களைப் பார்க்க  ராகுல்காந்தி ஆசைப்பட்டால், பெண்கள் ஹாக்கிப் போட்டியைப் பார்க்கப் போகட்டும்' என்று ஆர்.எஸ்.எஸ் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், குஜராத்தில் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பெண்கள் கழிவறைக்குள் தெரியாதத்தனமாக நுழைந்துவிட்டார். கழிவறை ஆண்களுக்கானது அல்ல என்பதைத் தெரிந்துகொண்ட ராகுல், உடனடியாக வெளியே வந்தார். ராகுல்காந்தி எப்போது எதில் சிக்குவார் என்று கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள், 'பெண்கள் கழிவறைக்குள் ஏன் நுழைந்தீர்கள்' என்று கேள்வி எழுப்ப வெளியே தயராக காத்திருந்தனர். 

கறுப்புப் பூனைப்படையினர் பத்திரிகையாளர்களை ராகுல்காந்தியிடம் நெருங்கவிடவில்லை. 'பெண்கள் கழிவறை' என்று குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. ராகுல்காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாத காரணத்தால் உள்ளே நுழைந்துவிட்டார். இந்தச் சம்பவம், அனைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்கள், இளம்பெண்களை ராகுல் காந்தி சந்தித்துவருகிறார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement