Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுகாதார விழிப்புஉணர்வு சைக்கிள் பேரணி நெல்லையை அடைந்தது!

சைக்கிள் பேரணி

சுகாதார விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீர் முதல் குமரி வரை செல்லும் சைக்கிள் பேரணி நெல்லைக்கு வந்து சேர்ந்தது. பல்வேறு அமைப்பினரும் அந்தக் குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.

நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, 'தூய்மை இந்தியா' என்னும் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இதை நாட்டு மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், நாக்பூரைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழுவினர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரசார பேரணி நடத்திவருகின்றனர். ஓய்வுபெற்ற பொறியாளரான ரவீந்தர் தாரே தலைமையிலான இந்த சைக்கிள் பயணக் குழுவினர், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோயிலில் செப்டம்பர் 9-ம் தேதி பயணத்தைத் தொடங்கினர்.

சைக்கிள் பயணம்

தூய்மை இந்தியா, பெண் கல்வி, பெண் சிசுக் கொலை தடுப்பு, மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர். 3562 கி.மீ தூரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இந்தக் குழுவினர், இன்று நெல்லை வந்து சேர்ந்தனர். சந்திப்பு பகுதியில் உள்ள பாரதி சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்தனர். 

சைக்கிள் குழுவினரருக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை குமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், தங்களது விழிப்பு உணர்வுப் பயணத்தை நிறைவுசெய்ய உள்ளனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement