சிங்கக்குட்டிக்கு முதல்வர் வைத்த பெயர்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில், 7.3 கோடியில் கட்டப்பட்ட வன உயிரியல் ஆய்வு நிறுவனக் கட்டடத்தைத் திறந்துவைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்கும்வரை, வெளியில் இருந்து ஆராய்ச்சியாளர்களை வைத்து வகுப்பெடுக்க உள்ளார்கள். ஜெயலலிதா முதல்வராகவும் வனக்குழுத் தலைவராகவும் இருந்தபோது, 2013-ல் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. தற்போது வனக்குழுத் தலைவராக முதல்வர் பழனிசாமி இருக்கிறார். 2013-க்குப் பிறகு, தற்போதுதான் வனக்குழு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் பெஞ்சமின் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வண்டலூர் சிங்ககுட்டி விஷ்ணு

கூட்டம் முடிந்த பிறகு, ஜான்சி-சிவா இணை ஈன்றெடுத்து வளர்த்துவந்த  ஆறு மாத ஆண் சிங்கக் குட்டிக்கு, ‘விஷ்ணு’ என எடப்பாடி பழனிசாமி பெயர் வைத்தார். அப்போது, மூன்று முறை விஷ்ணு என்ற பெயரை உச்சரித்தார். முதல்வர் நிகழ்ச்சிக்காக விடியற்காலையிலிருந்தே காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். முதல்வர் வந்தபோது, பெண் காவலர் ஒருவர் சர்க்கரைச்சத்து குறைபாட்டால் மயக்கமுற்றார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!