Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தீபாவளி பலகாரத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை' – தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

diwali sweets

’தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடைகளில் விற்பனைசெய்யப்படும் பலகாரங்களில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thoothukudi collector - vengadeshஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’ தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரப் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் என அனைத்துத்  தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, உணவுப் பாதுக்காப்புத்துறையில் முறையாகப் பதிவுசெய்து உரிமம் பெற்ற பின்னரே, பொதுமக்களுக்கு இனிப்பு, கார உணவுப் பண்டங்களை விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 உணவுப் பண்டங்களைத் தயார்செய்யும்போது, தரமான மூலப் பொருள்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான முறையில்தான் மக்களுக்கு விற்பனைசெய்ய வேண்டும். இத்தயாரிப்பில் கலப்படப் பொருள்களையோ, அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. கலப்படம் செய்யப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு, விவரச்சீட்டு இணைக்கும்போது அதில், உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், அதோடு சைவம் மற்றும் அசைவக் குறியீடு ஆகியவற்றையும் அவசியம் குறிப்பிட வேண்டும். விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.    

பொதுமக்கள், பண்டிகைக் காலத்தில், பலகாரங்களை வாங்கும்போது, உணவு பாதுகப்புத் துறையிடம் பதிவுபெற்ற கடைகள், விற்பனையாளர்களிடமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை, விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.இந்தப் பொருள்களில் ஏதேனும் கலப்படப் பொருள் கலந்துள்ளதாக தெரிந்தால், உடனே 0461 – 2340699 என்ற மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலக எண்ணிலோ அல்லது 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடர்புகொண்டு புகார்செய்யலாம்.   ’’ எனத் தெரிவித்துள்ளார்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement