Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வண்டலூர் பூங்காவை இனி ரயிலில் சுற்றிப்பார்க்கலாம்!

பார்வையாளர்களின் வசதிக்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூபாய் 3 கோடி செலவில் 40 பேர் இருக்கைகொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் தெற்குப் பகுதியில், கேளம்பாக்கம் சாலையில் ஏழு கோடியே  13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு  நிறுவனத்தை (ஆராய்ச்சி , பயிற்சி மற்றும் கல்வி) த் திறந்துவைத்தார். இந்த உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில்,  வன உயிரின நலப் பாதுகாப்பு அறிவியல் மையம், வன உயிரின தடய அறிவியல் மையம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்புக் கல்வி மையம் ஆகிய மூன்று ஆராய்ச்சி மையங்கள் செயல்படும்.

அடைப்பிட விலங்குகள் மற்றும் வன விலங்குகளின் நலன்களை உறுதிசெய்யும் வகையில், அழிந்துவரும் விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை மீட்பதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல், அழிந்துவரும் விலங்குகளை மீட்க, தனியாக சிறப்பு இனப்பெருக்க மையங்கள் அமைத்து, அவற்றை இனப்பெருக்கம் செய்தல்,  உரிய பயிற்சிகள்மூலம் எதிர்காலத்திற்குண்டான வன உயிரினப் பாதுகாவலர்கள், வன உயிரின நிபுணர்கள் மற்றும் அறிவியலாளர்களை உருவாக்குதல், மனித-வன உயிரின மோதல்களுக்கு ரிய தீர்வைப் பரிந்துரைத்தல், பூங்கா மற்றும் அடைப்பிடவிலங்கு மேலாண்மைகுறித்து உயர்தர பயிற்சி அளித்தல் மற்றும் பூங்கா விலங்குகளுக்கு உயர்தர மருத்துவ வசதியை வழங்குதல் போன்றவை இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 19-வது ஆட்சி மன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சேலம் குரும்பபட்டி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த, ரூபாய் 9.12 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களின் வசதிக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூபாய் 3 கோடி செலவில் 40 இருக்கைகள்கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் சி.யுவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement