Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் தாய்மொழி தமிழாகி வருகிறது! - உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் மதுரை கலெக்டர் பெருமிதம்

தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மன்றம் சார்பில், அரசு ஊழியர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலகக் கருத்தரங்கு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. 

madurai collector

இதில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், தமிழ் இலக்கியவாதி கு. ஞானசம்பந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், "தாய் மொழி, தாய்நாடு, பூமித்தாய் இவற்றை மக்கள் பேண வேண்டும்.  அடிப்படையில் என் மொழி வேறாயினும் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, தமிழை ஆர்வமுடன் கற்றுவருகிறேன். தமிழ் மொழியின் சொல் வளம் என்னை வியப்படையச் செய்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், மெள்ள மெள்ள என் தாய்மொழி தமிழாகிவருகிறது" என்றார். மேலும் மாசில்லா மதுரையை உருவாக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

madurai collector

அரசு  ஊழியர்கள்  தமிழில் கையொப்பமிட வேண்டும். கோப்புகளில் தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையை இனி தமிழில் நிறுவ வகைசெய்ய வேண்டும் என வணிகர் சங்கப் பேரவையின் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement