வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (12/10/2017)

கடைசி தொடர்பு:15:27 (12/10/2017)

டெங்குவை ஒழிக்க அமைச்சர் செல்லூர் ராஜுவின் புது ஐடியா!

டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை இன்று தன்னுடைய தொகுதியில் நடத்தச் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய வழக்கமான பாணியில் அட்ராசிட்டி செய்து டெங்கு கவலையில் இருந்த மக்களைக் கலகலப்பாக்கினார்.  

செல்லூர்ராஜு


இன்று காலை கலெக்டர், கமிஷனர், கட்சி நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு சோலை அழகுபுரம், எம்.கே.புரம் பகுதிகளுக்க்ச் சென்றார். வீடு வீடாகச் சென்று, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், டிரம், தொட்டிகளில் தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள் என்றார். ``பைப்புல தண்னீரே வரல, அப்புறம் எங்கே தேக்கி வைக்கிறது'' என்று சொன்ன தெருவாசிகளின் பதிலைக் கண்டுகொள்ளாமல் அடுத்த வீட்டுக்கு சென்றார். கொசு மருந்து அடிக்கும் கருவியை ஏ.கே.47 போல தூக்கி வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

செல்லூர்ராஜு

எம்.கே.புரத்தில் ஒரு பெண்மணி, தங்கள் பகுதிக்கு நீண்ட நாள்களாகக் குடிநீர் வரவில்லையென்று அமைச்சரிடம் முறையிட, ``அதை மெதுவா சொல்லும்மா, பத்திரிகைகாரங்க என்னைய முற்றுகையிட்டதா எழுதிடப் போறாங்க’’ என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டார். தெரு முழுவதும் ரவுண்ட் அடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘டெங்கு கொசு வருவதற்குக் காரனம், அந்தக் காலம்போல பெண்கள் வீட்டில் சாணித் தெளிச்சு, மெழுகிக் கோலம் போடுவதில்லை, அந்தப் பழக்கம் மறைந்துவிட்டது. அதனால்தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அந்தக் காலத்தில் கொசுவரவில்லை’’ என்றவர் கிளம்பும்போது, ‘டெங்குவை முழுமையாக ஒழிக்கணும்னா, கொசுவை முழுமையா ஒழிச்சா போதும்’’ என்று தன்னுடைய ஆய்வு முடிவை அறிவித்துவிட்டுச் சென்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க