Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநகராட்சியின் அதிரடி வரிவிதிப்பால் கொந்தளித்த மக்கள்!

நெல்லை மாநகராட்சியின் அதிரடி வரி விதிப்பைக் கண்டித்து பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சதுர அடி கணக்கில் வரியை உயர்த்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளரான ஹர்மந்தர்சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை அளவெடுக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலப்பாளையம் பகுதியில் நடந்த அளவெடுக்கும் பணிகளை அப்பகுதி மக்களின் எதிர்ப்பால், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பாளையங்கோட்டைப் பகுதியில் தற்போது வீடுகளை அளந்து வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையின் மூலம் கணக்கிட்டு வரி விதித்தால், தற்போது கட்டும் வரியை விடவும் 1,500 முதல் 3000 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்ட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 13 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட வரியை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கட்ட வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முற்றுகை

இது தொடர்பாக வீடுகளுக்கு மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான உமாபதி சிவன் தலைமையில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி அவர்கள் கோரிக்கை எழுப்பினர். இதுதொடர்பாக 100 பேரை போலீஸார் கைதுசெய்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement