Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

களத்தில் குதித்த 600 மாணவர்கள்... புத்துயிர் பெறுகிறது கெளசிகா நதி!

கெளசிகாநதி

கோவையில் உள்ள கெளசிகா நதியை சுத்தப்படுத்துவதற்காக இன்று காலை பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் களமிறங்கியதைப் பார்த்து கோவை மக்களும், இயற்கை ஆர்வலர்களும் நம்பிக்கை பூத்திருக்கிறார்கள்.

கோவையை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள குருடிமலை, பொன்னூத்து மலைகளில் உருவாகி வண்ணத்தன்கரை, தாளமடல் பள்ளம், தன்னாசி பள்ளம், பெரும்பள்ளம் போன்ற ஓடைகளை இணைத்துக்கொண்டு, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக தெக்கலூர், புதுப்பாளையம் வழியாக பாய்ந்து திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது கெளசிகா நதி. 

ஒருகாலத்தில் சீறிப்பாய்ந்து விவசாயம் கொழிக்கச் செய்த கெளசிகா நதி, காலப்போக்கில் ஆக்கிரமிப்பில் சிக்கி அழிவை நோக்கிச் சென்றது. இதனால், குருடிமலையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மக்களுக்குப் பயன்படாமல் வீணாகி வந்தது. 2000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய கெளசிகா நதியை மீண்டும் பழையபடி உயிர்ப்பிப்பதற்காக 'கெளசிகா நதி மீட்புக்குழு' என்ற குழுவினர் பல வருடங்களாக கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கெளசிகா நதி வழித்தடத்தை சீரமைத்தால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மட்டுமல்லாமல், 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள்  ஏற்கெனவே தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பாரதியார் யுனிவர்சிட்டி, எஸ்.என்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லூரி, காருண்யா யுனிவர்சிட்டி, நேரு மஹா வித்யாலயா, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு கெளசிகா நதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement