Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்- செங்கோட்டையன் தகவல்!

 
 

வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுப்புறக் கண்காட்சி, அறிவியல் பெருவிழா பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

இக்கண்காட்சியில் 32 மாவட்ட அளவில் பரிசு பெற்ற மிகச்சிறந்த படைப்பாக 128 மாணவர்களின் படைப்புகளும், 32 ஆசிரியர் படைப்புகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் வெற்றி பெறும் படைப்புகள் தென்னிந்திய அளவில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கலந்துகொள்ள உள்ளன. இக்கண்காட்சி 12,13 மற்றும் 14.10.2017 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியைத் தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் பார்த்து பயன்பெற்று வருகின்றனர்.

இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,  "தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரூ.26.932 கோடி பள்ளிக்கல்வித்துறைக்காக நிதி ஒதுக்கி பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. ஏழைகள் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணினார். அவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால், அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்று கருதி ஏழை மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி வந்தார். அதைத்தொடர்ந்து இந்த அரசும் அதைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சிகளை அமைப்பதற்கு அடித்தளமாக இருந்தவர் ஜெயலலிதா. இதன்மூலமே சிறந்த ஊக்கமும், அறிவும் ஏற்படுகிறது.

மத்திய அரசின் எவ்வித தேர்வுகளையும் சந்தித்து அதில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு 3,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வருகின்ற நவம்பர் மாதத்துக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. அத்துடன் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.483 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்படவுள்ளன. 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டில் 1,6,8,11 ஆகிய வகுப்புகளுக்கும், 2019-2020-ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும், 2020-2021ம் ஆண்டில் 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கும் தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement